blog
2023-01-13

ஜனதா கட்சி

 

ஜனவரி 23 1977, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜனதா கட்சி தொடங்கப்பட்டது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல் படுத்திய நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடிய, ஜெயப்பிரகாஷ் நாராயணன், கிருபாளானி போன்றவர்களால்ஜனதா கட்சி துவங்கப்பட்டது.

காங்கிரஸ் (ஓ)

பாரதிய லோக் தளம்

ஜனசங்கம்

பாரதிய கிராந்தி தளம்

சுதந்திரா கட்சி

சோசலிஸ்ட் கட்சி

பிரஜா சோசலிஸ்ட் கட்சி

சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி

உட்கல் காங்கிரஸ்

ஜனநாயகத்திற்கான காங்கிரஸ்

சந்திர சேகர்,

கிருஷ்ன காந்த்,

ராம் தான்,

மோகன் தாரியா,

சந்திரஜித் யாதவ்,

லட்சுமி காந்தம்மா போன்ற

இளம் துருக்கியர் என்றகாங்கிரஸ் (ஆர்) கிளர்ச்சியாளர்கள் இணைந்து ஜனதா கட்சி உருவானது.

 

மொரார்ஜி தேசாய் தலைவராகவும், சரண் சிங் துணைத் தலைவராகவும்,

மூன்று பொதுச் செயலாளர்கள். எல்.கே. அத்வானி (ஜனசங்கம்), சுரேந்திர மோகன் (சோசலிஸ்ட் கட்சி) மற்றும்

ராம் தான் (காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்). தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அசோக் மேத்தா, அடல் பிஹாரி வாஜ்பாய், பானு பிரதாப் சிங், பைரோன் சிங் ஷெகாவத், பிஜு பட்நாயக், சிபி குப்தா, சந்த் ராம், சந்திரசேகர், எச்.எம். படேல், கே.எஸ். தாக்கரே, மிருணாள் கோர், என். சஞ்சீவ ரெட்டி, நானாஜி தேஷ்முக், என்.ஜி. கோரே, பா. ராமச்சந்திரன், சமர் குஹா, சிக்கந்தர் பக்த், ஏ. ஸ்ரீதரன், பி.சி. சென், கர்பூரி தாக்கூர், முரளி மனோகர் ஜோஷி என 27 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழு, புதிய கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பாக உருவாக்கப்பட்டது.மது தன்டவதே, ரபி ரே, இந்திராவை தோற்கடித்த ராஜநாரயணன், மதுலிமாயி என பலர்.

அகாலி தளம் பாதல், பர்னலா அமைச்சரவையில் இடம் பெற்றனர். கட்சியின் பொருளாளராக சாந்தி பூஷன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஜனதா கட்சி இந்தியா சுதந்திரத்திற்கு பின்

30 வருடங்களாக ஆண்டு வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை முதன் முதலில் தோற்கடித்து... மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசை non congress government நிறுவியது.

தமிழகத்தில் திமுக கூட்டணி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது