வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

 

வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் தமிழகத்தின் பல்வேறு தளத்தில் 51 ஆண்டுகளாக களப்பணியாற்றுபவர்,

 

தமிழகத்தின் அரசியல் களத்தில் 51 ஆண்டுகளாக களப்பணியாற்றுபவர், வழக்கறிஞர், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், நூல் ஆசிரியர், கி.ரா வின் கதைசொல்லியின் ஆசிரியர், நாளேடுகளின் கட்டுரையாளர், சமூக வலைதளங்களில் செயல்படுபவர், தமிழகத்தின் அரசியல் கட்சிகளிலேயே முதல் முதலாக முதன்மை செய்தி தொடர்பாளராக 30 ஆண்டுகளுக்கு முன்பே நியமிக்கப்பட்டவர், தேர்தல்களில் வேட்பாளராக களம் கண்டவர், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசமும் கண்டது உண்டு, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர் என பல அடையாளங்கள் உண்டு. இப்படி பல தளங்களில் செயல்பட்டு வருபவர்.

 

பெருந்தலைவர் காமராஜர், திமுக தலைவர் கலைஞர், ஈ.வி.கே. சம்பத், கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன், விவசாயிகளின் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு, திரு. வைகோ ஆகியோருடனிருந்து அரசியல் பணிகளை ஆற்றியவர். வடபுல தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திராகாந்தி, நீலம் சஞ்சீவி ரெட்டி, வி.பி.சிங், சந்திரசேகர், தாரகேஷ்வரி சின்ஹா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராமகிருஷ்ண ஹெக்டே, ராம்விலாஸ் பாஸ்வான், கே.பி.உன்னிகிருஷ்ணன், கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் ஆகியோருடன் அறிமுகமும் நன்மதிப்பும் பெற்றவர்.

கடந்த 1989 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். இவரோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆரம்பக் கட்டத்தில் தங்கியிருந்து நட்பு பாராட்டியவர். அப்போது வெளி உலகத்துக்கே தனது முகத்தை காட்டாமல் தலைமறைவு வாழ்வில் இருந்தார் பிரபாகரன். எவ்வளவோ பணிகள், காலம் தந்த பாடங்கள் என கடந்த காலச் சக்கரங்கள் வேகமாக நகர்ந்துவிட்டன. சுடுமணலில் பயணமோ, தென்றல் பயணமோ என்று பாராமல் நிம்மதியான அரசியல் பயணமாக இவருக்கு உள்ளது. ஏற்ற இறக்கங்கள் எல்லாம் இதில் இயற்கையான நிலைப்பாடு ஆகும். எவ்வளவோ தமிழக அரசியல் முக்கிய நிகழ்வுகள் கண் முன் நிகழ்ந்துள்ளன.

Step one

மக்களுக்கான நீதி சேவை:

1.       சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மக்கள் நலனுக்காக பல்வேறு பொது நல வழக்குகளை தொடர்ந்தவர். அதில் நாட்டில் உள்ள நதிகளை தேசியமயமாக்குதல், கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி மாவட்டம் நெய்யாறோடு இணைத்தல், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைத்து மற்றும் மேற்கே கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பி விடக் கோரி என்று 1983 ஆம் ஆண்டு முதல் போராடி உச்ச நீதிமன்றத்தில் போராடி 27-02-2012ல் தீர்ப்பையும் பெற்றார்.

2.       உச்சநீதிமன்றத்தில் சிறைக் கைதிகளுக்கான வாக்குரிமைக்காகவும்

3.       உச்ச நீதிமன்றத்தில், பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் மூன்றடுக்கு முறைக்காகவும் போராடினார். பல்வேறு ஊழலை ஒழிக்க தேர்தலில் சீர்திருத்தங்களை கொண்டுவரவும் வழக்கு தொடுத்துள்ளார்.

4.       வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பொதுநல வழக்குகளைத் தொடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் இவர் தொடர்ந்த குறிப்பிடத்தக்க பொதுநல ரிட் மனுக்கள்:

5.       விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள், அவர்களுக்கு கடன் நிவாரண உரிமைகளைப் பெறவும் வழக்குகள் தொடுத்து உரிய ஆணைகளையும் உயர்நீதிமன்றத்தில் பெற்றார்.

6.       தூக்குத் தண்டனை கூடாது என்று இன்றைக்கு எட்டு திக்கிலிருந்தும் குரல்கள் கேட்கின்றன. 1983 ல் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, இனிமேல் வேறு வழி இல்லை. தூக்கு தண்டனைதான் என்ற நிலையில் 3 நாட்களில் தூக்கில் தொங்க இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரை, வெறும் மூன்று வரி தந்தியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியதெல்லாம் கடந்த காலம். இது ஒரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்ற முறையில் செய்த கடமையாகும்.

7.       கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த பயணிகள் வருவதற்கு கேரள அரசு தடை விதித்தையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அங்கு காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் வழிபாட்டை தொடர வழி செய்தார்.

8.       விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு வழக்கு, ஏனைய வழக்குகளிலும் வழக்கறிஞராக வாதிட்டவர்.

9.       ஈழத் தலைவர்கள் பாலசிங்கம், சந்திரஹாசன், டாக்டர் சத்யேந்திரா எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலிருந்து நாடு கடத்தியபோது வழக்குத் தொடுத்து 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிறப்பு அனுமதி பெற்று நடத்தினார்.

10.       கடந்த 1983 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வந்ததையடுத்து அந்த ஆலையினை மூட வேண்டி தொடர்ந்த வழக்கில் ஆலையை மூடுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு 70 கோடி ரூபாய் செலவில் அந்த ஆலையை புதுப்பித்து சுற்றுச்சுழல் மாசுபடாமல் இருக்க செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவால் ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதி மகிழ்ச்சியடைந்து திரு. கே.எஸ்.ஆர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

11.       திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழக அரசு வறட்சி பாதிக்கபட்ட பகுதியாக அறிவிக்க கோரி இவர் 1983ல் தொடர்ந்த ரிட் மனு.

12.       காவல் நிலையத்தில் இறந்த பலரது குடும்பங்களுக்கு பொதுநல வழக்கு தொடர்ந்து அதன் மூலம் இழப்பீட்டு தொகையை பெற்றுத் தந்துள்ளார்.

13.       விவசாய மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக இவர் தொடர்ந்த ரிட் மனுக்கள் பல நிலுவையில் உள்ளன.

14.       காவிரி பிரச்சினையிலும், முல்லைப்பெரியாறிலும் எடுத்துக்கொண்ட வழக்குமன்ற நடவடிக்கைகள்.

15.       சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999ல் சட்ட மேலவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பெற்றார்.

16.       தேசிய மனித உரிமை ஆணையத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் அப்பாவி மக்கள் கர்நாடக அரசால் மைசூர் சிறையில் வாடியவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்தார்.

17.       கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக முதல் முதலில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து இரு முறை 1988 மற்றும் 2011 ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

18.       உச்ச நீதிமன்றத்தில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை போன்றவற்றின் வளங்களை பாதுகாக்க வழக்கு

19.       உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் தேர்தல் சீர்திருத்தம் குறித்தான வழக்கு

20.       தமிழக நீர்நிலைகளான ஏரி, குளங்கள் பாதுகாப்பு குறித்தான பொதுநல வழக்கு

இதுவரை இவர் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து எழுதி பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க சில:

1.       உரிமைக்கு குரல் கொடுப்போம்

2.       மனித் உரிமைகள் என்றால் என்ன?

3.       நிமிர வைக்கும் நெல்லை

4.       தமிழ்நாடு - 50

5.       கரிசல் காட்டின் - கவிதை சோலை பாரதி

6.       கனவாகிப் போன கச்சத்தீவு

7.       ஈழத் தமிழர் பிரச்சினை

8.       சேதுக் கால்வாய் – ஒரு பார்வை

9.       தூக்குக்கு தூக்கு

10.       முல்லைப் பெரியாறு

11.       மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்

12.       தமிழ்நாடு சட்ட மேலவை

13.       திமுகவும் சமூக நீதியும்

14.       Eelam Tamil’s Issue

15.       Impunity in Sri Lanka

16.       மாநில சுயாட்சி

17.       தமிழக நதிநீர்ச் சிக்கல்கள்

18.       தமிழக விவசாயிகள் போராட்ட வரலாறு

19.       தமிழக பிரச்சனைகள், சிக்கல்கள், திட்டங்கள்

20.       கதைசொல்லி – கே.எஸ்.ஆர். குறிப்புகள்

21.       பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம் என்ற ஜெகவீரபாண்டியனாரின் நூலை திரும்பவும் பதிப்பித்து வெளியிட்டார்.

22.       தினமணியில் 1977 ல்லிருந்து இவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு தமிழகம், இந்தியா, ஈழத் தமிழர் பிரச்சனை, புவி அரசியல் குறித்து மட்டுமில்லாமல் வரலாறு, பொருளாதாரம் குறித்தெல்லாம் பல்வேறு தரவுகளோடு எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.

23.       கோவையை நிர்மாணம் செய்ததில் ஒருவரான பி.நரசிம்மலு நாயுடு அவர்கள் 1919ல் எழுதிய தட்சிணபிரதேசம் யாத்திரை என்ற நூலை செம்பதிப்பாக மீண்டும் பதிப்பித்து கொண்டு வரும் பணிகளை கவனித்து வருகிறார்.

24.       மத்திய மாநில உறவுகள் குறித்தான நூல்.

25.       தமிழகத்தில் சி.நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாய போராட்டங்கள் குறித்தான விரிவான நூல்.